Connect with us

“7 Bigg Boss சீசனிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல போட்டியாளர்கள் List..!”

Bigg Boss Tamil Season 7

“7 Bigg Boss சீசனிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல போட்டியாளர்கள் List..!”

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக கடந்து தற்போது 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடைபெற்ற அணைத்து சீசனிலும் சக போட்டியாளர்களால் வெறுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த போட்டியாளர்கள் இவர்கள்தான்.

பரணி: தமிழில் சில படங்களே நடித்தாலும் அவரது கதாபாத்திரம் மக்களிடம் பேசியது. அந்தளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தினார். பிக்பாஸில் கலந்துகொண்ட பரணி அங்கே இருக்க முடியாமல் சுவர் ஏறி குதித்தார். அவரின் வெள்ளந்தி மனதிற்காக மக்கள் அவரை கொண்டினார்கள்.

ஓவியா: முதல் சீசனில் கலந்து கொண்டு ஒட்டு மொத போட்டியாளர்களாலும் வெறுக்க பட்டவர். ஆரவ் மீது ஏற்பட்ட காதலால் அவரால் அந்த இடத்தில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. ஆனால் வெளியில் வந்த அவருக்கென்று ஒரு ஆர்மியே உருவானது. இன்றும் அவரை போல யாரும் இல்லை என்ற பெயர் மக்கள் மத்தியில் இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண்: இவர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். போட்டியில் வெற்றிபெறமுடியாமல் போனாலும், வெளியே வந்தவுடன் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. சமீபத்தில் கூட பார்க்கிங் என்ற படத்தில் நடித்து கலக்கியிருந்தார். இப்படி படங்களின் மூலம் மக்கள் மனதில் நின்று வருகிறார்.

கவின்: மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட இவர் வீட்டிற்குள் இந்தபோது வெகுவாக கவரப்படவில்லை என்றாலும், வெளியேவந்தவுடன் பட வாய்ப்புகள் வந்தது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேறிவிட்டார். இந்த ஆண்டு அவர் நடித்த டாடா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

லாஸ்லியா: மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு மக்களில் மனதில் நின்ற லாஸ்லியாவிற்கு, வீட்டிற்குள் இருக்கும்போது பலருடன் சண்டை வந்தது. இவருக்கென ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மி என்ற ஒன்றை உருவாகினார். தற்போது பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் ஆர்மி வைரலாக இருந்துதான் வருகிறது.

சாண்டி மாஸ்டர்: அதே மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட இவர், யாராலும் வெறுக்கும் அளவிற்கு மோசமான நபர் அல்ல. ஆனால் மக்கள் மத்தியில் நீங்கா பெயரை பெற்றவர் இவர். இவருக்கும், கவினுக்கும் இருக்கும் நெருங்கிய நட்பை இன்றுவரை நம்மால் காண முடிகிறது. லியோ படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆரி: இவர் படங்களில் நடித்தாலும் பெரிய அளவு மக்களிடம் ரீச் கிடைக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் வந்த பிறகு இவரின் நேர்மைக்காகவே மக்கள் கூட்டம் கூடியது. இவரின் பொறுமையை பலரும் கற்று கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு பிரபலமானார். இவருக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உள்ளது.

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

விக்ரமன்: இவர் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் சக போட்டியாளரான அசீமுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும் அசீம் இவரை வெறுத்தாலும் வெளியுலக மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர்.

பிரதீப்: ஒளிபரப்பாகி வரும் 7 சீசனில் கலந்து கொண்டு ரெட் கார்டு வாங்கி வெளியில் சென்றார். ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் அவரை எதிர்த்து உரிமை குரல் தூக்கினர். ஆனால் வெளியில் வந்த பிறகு அவருக்கு இருக்கும் வரவேற்பு வேற லெவெலில் இருந்தது.

அர்ச்சனா: இப்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. இவரை உள்ளே இருக்கும் நபர்கள் வெறுத்தாலும் இவருக்கு வெளியில் கைதட்டல்கள் பலமாக இருக்கின்றன. அதே போல இவருக்கு ரசிகர் கூட்டமும் பெருகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top