Connect with us

“என் படத்துக்கு Support கொடுங்க போதும்.. Biggboss Pradeep போட்ட ட்வீட்.. “

Bigg Boss Tamil Season 7

“என் படத்துக்கு Support கொடுங்க போதும்.. Biggboss Pradeep போட்ட ட்வீட்.. “

பிக் பாஸ் 7ம் சீசனில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.. அதனை யாருமே எதிர்பார்க்கவில்லை.. அதனை போல விரும்பவும் இல்லை.

அதனால் வெடித்த சர்ச்சை காரணமாக நெட்டிசன்கள் கமல்ஹாசன், விஜய் டிவி என எல்லோரையும் ட்ரோல் செய்தனர்… வீட்டில் உள்ள பலருக்கு இடம் இதனாலே காலி ஆனது என்றும் சொல்லலாம்… மாயா – பூர்ணிமாவை வெளுத்து வாங்கி வருகின்றனர்..

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பேசிய கமல் அந்த ரெட் கார்டு முடிவை எடுத்தது போட்டியாளர்கள் தான், அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பேசினார்… இது அவரை பற்றி தவறாக கமல் எதுவும் சொல்லவில்லை என்பது போல கமெண்ட் தெரிவித்தார்..

மேலும் பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை அது என்றும் அது நீங்க தந்தது என்றும் பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரதீப் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். ரொம்ப எல்லாம் யோசிக்காதீங்க. நான் ஜாலியா தான் இருக்கேன்… என்று சொல்லியிருந்தார்..

அதனை போல போய் பட்டாசு வெடிக்கிறதுனா வெடிங்க…கரி குழம்பு சாப்பிடுங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க…உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க.. கண்டிப்பா நான் ஏத்துக்கொள்கிறேன் என்பது போல பிரதீப் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top