Connect with us

ஓடிடியில் வெளியானது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்..!!

Cinema News

ஓடிடியில் வெளியானது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்..!!

அசோக் செல்வன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

கிரிக்கெட் மற்றும் உள்ளூர் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மினிமம் படிஜட்டில் உருவான இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வென்ற Purple Cap - மாறி மாறி அன்பை பரிமாறிக்கொண்ட நட்டு மற்றும் அவரது மகள்

More in Cinema News

To Top