Connect with us

ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும் – அண்ணாமலை

Featured

ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும் – அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் மறைந்த BSP மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது, தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சரியாகயில்லை;

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சரணடைந்தவர்கள் முக்கியமல்ல, இந்த படுகொலை சம்பவத்திற்கு மூளையாக இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு முறையான நியாயம் கிடைக்க வேண்டும்.

தமிழ்நாட்டு காவல்துறைக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அவர்களை வைத்து இந்த வழக்கை வாசிரிக்க அனுமதிக்க கூடாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் - இ.பி.எஸ் கண்டனம்..!!

More in Featured

To Top