Connect with us

ஜனநாயகன் திரைப்படம் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசிய இயக்குநர் ஹெச். வினோத்

Cinema News

ஜனநாயகன் திரைப்படம் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசிய இயக்குநர் ஹெச். வினோத்

முதல் முறையாக இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும். அரசியலுக்கு பிரவேசிக்க உள்ளதால், சினிமாவிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகன் வெளியீட்டை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது, படப்பிடிப்பு நிறைவு பெற்று, போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், விழா மேடையில் ஜனநாயகன் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் முதல் முறையாக திறந்த மனதுடன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

“இது விஜய் சாரின் பக்கா Farewell படம். அதனால், மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் – இந்த மூன்றையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். படம் ஒரு முழுமையான கம்ப்ளீட் மீல்ஸ் மாதிரி இருக்கும்,” என்று தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top