Connect with us

மொழியைப் பற்றிய துல்லியமான பேச்சு: எங்களிடம் படை வீரர்கள் இருக்கிறார்கள் – கமலின் உற்சாகப் பேச்சு

Featured

மொழியைப் பற்றிய துல்லியமான பேச்சு: எங்களிடம் படை வீரர்கள் இருக்கிறார்கள் – கமலின் உற்சாகப் பேச்சு

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் தக் லைஃப் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து அவர் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளதால், கர்நாடகாவில் மட்டுமே படம் வெளியிடப்படமாட்டாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்நிலையில், படக்குழு சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, நாசர், வையாபுரி, அசோக் செல்வன், அபிராமி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள 9 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் புரோமோஷன் வேலைகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று ஜூன் 4 ஆம் தேதி படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி முடித்துள்ளனர்.

அப்போது கமல்ஹாசன் கூறியதாவது: “படம் எப்படி இருக்குமோ என்று யாரும் அங்கலாய்ப் பேசியதை எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. உங்கள் எதிர்பார்ப்பை உங்கள் கண்கள் மூலம் காட்டுகிறீர்கள். இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் அனைவரும் திறமையானவர்கள். இங்கு வந்து கற்றுக் கொள்ள நினைத்தவர்கள் இல்லை. அவர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் முகத்தில் இருந்த சந்தோஷம் பெரிய தொற்று; அது மொத்த யூனிட்டுக்கும் தொற்றியது.

படை வீரர்கள்: கேமராவை மட்டுமல்ல, தமிழ் சினிமாவையும் புரட்டிப் போட வேண்டும் என்பது எங்களின் ஆசை. அதற்கு முயற்சி செய்து கொண்டு உள்ளோம். ஒரு ஆளாக தமிழ் சினிமாவை புரட்டிப் போட முடியாது. யாராவது உதவி வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அசைத்து பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் எங்களுக்கு படைவீரர்களே கிடைத்துள்ளனர். அவர்கள் சர்வதேச அளவிற்கு பணியாற்றியவர்கள். வெளிநாட்டினர் இங்கு வந்து பணியாற்றியதைவிட இங்குள்ளவர்கள் வெளிநாட்டினர் பாராட்டும் அளவுக்கு பணியாற்றியுள்ளனர்.

நாசருக்கு ‘நாயகன்’ படம் எப்படி இருந்ததோ, அதுபோல எனக்கு இந்த படத்தின் மூலம் மணிரத்னம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. 40 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்த மணிரத்னம் இப்போது சினிமா ஞானியாக உள்ளார். ரவி.கே. சந்திரன் இந்நேரம் அமெரிக்காவில் படம் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டியவர். 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘மருதநாயகம்’ படத்தில் இருவரும் பணியாற்றி முடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தின் மூலம் அவரது ஒளிப்பதிவில் முழுமையாக ஒரு படத்தில் நடித்துள்ளேன். யார் யாரோ வெல்லலாம் என்பது சரி. ஆனால் சினிமா வெல்ல வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

See also  தன் திருமண நாளில் விஜய் எடுத்த அதிரடி முடிவு – தமிழகம் முழுக்க பரபரப்பு!

படம் வெளியான பின்னர், படத்தில் நடித்தவர்கள், டெக்னீசியன்கள் என அனைவரின் திறமை குறித்தும் நான் பேசுகிறேன். தமிழனாக என் கடமை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ் நாட்டிற்கு நன்றி சொல்ல வேண்டும். மேடையில் பேசும்போது உயிரே, உறவே, தமிழே என்று கூறியது முழுமையாக உணர்கிறேன். நாம் இன்னும் பேச வேண்டியது நிறைய உள்ளது. அதற்கான நேரத்தை ஏற்பாடு செய்வதும் என் கடமை தமிழனாக” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top