Connect with us

கமல்ஹாசன் பேரனாக நடித்தவர் இப்போ பான் இந்தியா ஸ்டாரா? சுவாரஷ்ய தகவல்

Kamal_Hasan_Allu_Arjun

Cinema News

கமல்ஹாசன் பேரனாக நடித்தவர் இப்போ பான் இந்தியா ஸ்டாரா? சுவாரஷ்ய தகவல்

1986இல் ஒரு படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் பேரனாக நடித்த நடிகர் தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மைதான்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வரும் கல்கி என்ற படத்திலும் கமல் நடித்துள்ளார். மல்டி ஸ்டார் படமான இதில் பிரபாஸும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், 1986இல் கமல்ஹாசனின் பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் சுவாரஸ்ய தகவல் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமல்ல. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்தான்.

1986இல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ராதிகா முன்னணி வேடங்களில் நடித்த சிப்பிக்குள் முத்து என்ற படத்தில் தான், கமல்ஹாசனின் பேரனாக ஒரு சிறிய வேடத்தில் அல்லு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இந்த படம் முதலில் தெலுங்கில் ஸ்வாதி முத்யம் என்ற பெயரில் வெளியாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாத அல்லு அர்ஜுன் 2001இல் டாடி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்ததன் மூலம் நடிப்பில் களமிறங்கினார். அதன் பிறகு 2003இல் கங்கோத்ரி படத்தின் மூலம் கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

மேலும், புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிந்த பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் Viral Photos..

More in Cinema News

To Top