Connect with us

மார்பகம் குறித்து ஆபாச கமெண்ட் போட்டவர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் நெத்தியடி பதில்

Actress_Kaniha

Cinema News

மார்பகம் குறித்து ஆபாச கமெண்ட் போட்டவர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் நெத்தியடி பதில்

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகா தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் போடுபவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவரும் திவ்யா வெங்கடசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவருமான நடிகை கனிகா 2001இல் மிஸ் சென்னை அழகிப்போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார். இதன் பிறகு 2002இல் வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு மாதவன் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. எனினும் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க அளவில் படங்கள் அடித்த கனிகா, ஜெனிலியா மற்றும் சதா போன்ற நடிகைகளுக்கு டப்பிங்கிலும் குரல் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்த கனிகாவுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், தற்போது சன் டிவியில் பிரபலமாக உள்ள எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் வந்து தனது மார்பகங்கள் பெரிதாக இருப்பதாக சிலர் கமெண்ட் செய்து வருவதாக கனிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய கனிகா, இப்படி கமெண்ட் அடிப்பவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உள்ளதுதான் தனக்கும் உள்ளது என்பதே அவர்களுக்கான தனது பதிலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், திருமணமாகி கர்ப்பம் அடைந்தவர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்கள் அப்படித்தான் இருக்கும் எனத் தெரிவித்ததோடு, தனக்கும் அதனால் தான் அப்படி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியாகிறது "Manjummel Boys" - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top