Connect with us

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் 7 பிரபலம்! வெளியான அறிவிப்பு! Viral!

Bigg Boss Tamil Season 7

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் 7 பிரபலம்! வெளியான அறிவிப்பு! Viral!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 80 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு , விக்ரம், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தசீசனின் ஹைலைட்டாக இருப்பது என்றால் அது மாயவும், பூர்ணிமாவும்தான்.

கேப்டன்சியை பூர்ணிமா ஒழுங்காக செய்தார் என்ற பெயர் எடுத்தாலும் மாயாவின் கேப்டன்சி கீழ் அவரும் மாயாவும் எல்லை மீறி சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விசித்திராவிடம் பூர்ணிமா உங்கள் மூளை கீழே கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதெல்லாம் கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. ஆனால் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறார். அநேகமாக இறுதி 5 பேருக்குள் பூர்ணிமா வருவாரோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதற்கிடையே அராத்தி என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் பிரபலயத்தை பயன்படுத்த நினைத்துதான் அவர் வீட்டுக்குள் வந்தார். அதேசமயம் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாகவே நயன் தாரா நடித்த அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பூர்ணிமா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதன்படி படத்துக்கு செவப்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. எம்.எஸ்.ராஜா என்பவர் படத்தை இயக்குகிறார். இந்த சூழலில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது முட்டையில் செவப்பி என்ற பெயருடன் அந்த டைட்டில் வெளியாகியிருக்கிறது.

இந்த டைட்டிலை பார்த்த ரசிகர்கள் முதல் லுக்கே வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக படமும் வித்தியாசமாக இருக்கும். பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபல்யத்தையும், அனுபவத்தையும் வைத்து பூர்ணிமா சினிமாவிலும் வெல்ல வாழ்த்துகள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Bigg Boss Tamil Season 7

To Top