Connect with us

“95% பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியது” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Featured

“95% பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியது” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

“மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 95% பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 95% பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவ்தாஸ் மீனா கூறியதாவது :

  • புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 95% பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது . 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
  • 850 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியாளர்கள் களத்தில் உள்ளனர்
  • சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடமாடும் பால், காய்கறி கடைகள் ஏற்பாடு. இன்று 50 வாகனங்களும், நாளை முதல் 150 வாகனங்களும் இயக்கப்படும்
  • 3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர் . 343 இடங்களில் தண்ணீரை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
  • ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகின்றன
  • தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை முழுமையாக வெளியேற்றிய பின், மின் இணைப்புகள் சீராகும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Featured

To Top