Connect with us

“உங்களுக்கு தமிழ்நாட்ல இருக்குறதுக்கே தகுதி இல்ல” – மூத்த போட்டியாளரிடம் வன்மத்தை கக்கிய கூல் சுரேஷ் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

“உங்களுக்கு தமிழ்நாட்ல இருக்குறதுக்கே தகுதி இல்ல” – மூத்த போட்டியாளரிடம் வன்மத்தை கக்கிய கூல் சுரேஷ் – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் நாமினேஷன் ப்ரோமோ சற்று வித்யாசமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது . அதில் நாமின்ட் செய்ய விரும்பும் நபர்களின் ஆடைகளில் ஒன்றை எடுத்து வீட்டில் வைக்கப்பட்டுள்ள TRASH BIN பாக்சில் போடும்படி பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதனபடி அர்ச்சனா நிக்சனை நாமின்ட் செய்ய விஷ்ணு பூர்ணிமாவை நாமினேட் செய்ய பூர்ணிமா பதிலுக்கு விஷ்ணுவை நாமின்ட் செய்கிறார் .அடுத்து வந்த கூல் சுரேஷ் உங்களுக்கு இந்த தமிழ்நாட்ல இருக்குறதுக்கு தகுதி இல்லை என கூறி போட்டியாளரின் ஆடையை அந்த பாக்சில் போடுகிறார். உடனே கேமெரா விசித்ரா பக்கம் திரும்புகிறது இதன் மூலம் சுரேஷ் – விசித்ராவை பார்த்து தான் அந்த வார்த்தையை சொல்வது போல் தெரிகிறது.

கமல்ஹாசன் நேற்று தான் வன்மத்தை கக்கக்கூடாது அப்படி கக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னும் கூல் சுரேஷின் இந்த வன்மம் கலந்த பேச்சு சற்று ஓவராக தான் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் அனன்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள் 📸🔥

More in Bigg Boss Tamil Season 7

To Top