Connect with us

உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார்..!!

MariaBranyasMorera

Cinema News

உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார்..!!

உலகின் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரா தனது 117வது வயதில் காலமாகி உள்ளார்.

வேகமாக சுழன்றோடும் இந்த நவீன காலகட்டத்தில் மனிதனின் வாழ்நாள் 60 வயதை தாண்டுவதே மிகவும் சிரமாக உள்ளது . இதற்கு இன்றைய கால உணவுகள் பெரிய பங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. அசுத்தமான காற்று சத்து குறைபாடான காய்கறிகள் உள்ளிட்ட பல விசயங்கள் மனிதனின் வாழ்நாளை குறைப்பதாகஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரா தனது 117 வயதில் காலமாகி உள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த மரியா இந்த நூற்றாண்டின் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைக் கடந்தவர்; மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளூ உள்ளிட்டவற்றையும் தனது காலத்தில் பார்த்தவர்.

கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்தவர் 2023இல் கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டார் இந்நிலையில் தனது 117 வது வயதில் மரியா உயிரிழந்துள்ளார். இதையடுத்து மரியாவின் மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top