Connect with us

தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்..!!

Cinema News

தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார் . இதையடுத்து தான் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தேர்தலுக்கு முன் நடிப்பதில் இருந்து முழுமையாக விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார் .

இதையடுத்து இரண்டு கோடி உறுப்பினர்கள்‌ என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க அவரது கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் இன்று வரை சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த விழாவிற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top