Connect with us

“வித்தியாசமாக நடைபெற்ற மிட் வீக் எவிக்சன்” வெளியேறும் போட்டியாளர் யார் – ப்ரோமோ!!

Bigg Boss Tamil Season 7

“வித்தியாசமாக நடைபெற்ற மிட் வீக் எவிக்சன்” வெளியேறும் போட்டியாளர் யார் – ப்ரோமோ!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .

100 நாட்கள் அனல் பறக்க நடைபெற்ற இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த முறையும் மிட் வீக் எவிக்சன் நடைபெற உள்ளது.

பிக் பாஸ் குழு தற்போது வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் மிட் வீக் எவிக்சன் குறித்த அறிவிப்பை தெரிவிக்கிறார் . பிக் பாஸ் சொன்ன இந்த அதிர்ச்சி தகவலால் சோர்ந்து போன போட்டியாளர்கள் செய்வதறியாது அப்படியே நின்றனர்.

இதையடுத்து இந்த மிட் வீக் எவிக்சன் எப்படி நடக்க போகிறது என்ற ப்ராசெஸ்ஸை பிக் பாஸ் சொல்கிறார் இறுதி வாரத்தில் இருக்கும் 6 போட்டியாளர்களும் மூடப்பட்டிருக்கும் கதவின் அருகில் போய் நிற்க வேண்டும்.

இதையடுத்து வீட்க்குள் ஒரு மணியோசை அடித்த பின் 6 போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் கதவை திறக்க முயற்சிக்க வேண்டும் இறுதியில் எந்த போட்டியாளரின் கதவு திறக்கவில்லையோ அவர் தான் மிட் வீக் எவிக்சனில் வெளியேறும் போட்டியாளர் என பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளே வருகை தந்திருக்கும் வேலையில் நடைபெறும் மிட் வீக் எவிக்சனில் எந்த போட்டியாளர் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்று தெரியவில்லை .

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top