Connect with us

பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்த விஷ்ணு – வெளியான நியூ ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்த விஷ்ணு – வெளியான நியூ ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டாவது புரோமோவில் விஷ்ணு தான் இந்த வீட்டை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார் .

இந்த வார வீட்டு மளிகை பொருட்களை வாங்க விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் பிக் பாஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கின்றனர் ஆனால் எடுக்க நினைத்த பொருட்களை எடுப்பதற்குள் மணி அடுத்திவிட்டதால் விஷ்ணு நைசாக ரெண்டு பொருட்களை எடுத்து கூடையில் வைக்கிறார் அதனை கண்டுபிடித்த பிக் பாஸ் விஷ்ணுவை எச்சரித்து அனுப்புகிறார்.

இதையடுத்து என்னால் இனி இங்கு இருக்க முடியாது நான் வெளியில் செல்ல விரும்புகிறேன் என கூல் சுரேஷிடம் விஷ்ணு புலம்ப ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

கடந்த வாரம் முழுவதும் விஷ்ணுக்கு அடிமேல் அடி விழுந்தாலும் கமல்ஹாசன் அவர்களும் விஷ்ணுக்கு சில அறிவுரைகளை கூறியதால் மனமுடைந்த விஷ்ணு இந்த முடிவை எடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கனவுகளை காதலியுங்கள்” – தமன்னா மாணவர்களுக்கு செய்தி

More in Bigg Boss Tamil Season 7

To Top