Connect with us

நீ வா தலைவா வா : தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார் கேப்டன் விஜயகாந்த் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Featured

நீ வா தலைவா வா : தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார் கேப்டன் விஜயகாந்த் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும், நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்ள இருப்பதாகவும் அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில் கூறிருப்பதாவது :

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 14.12.2023 வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும், கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள்

பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மருத்துவமணியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள செய்து விஜயகாந்தின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top