Connect with us

ஒவ்வொரு எபிசோடுக்கும் லட்சங்களில் சம்பளம்! விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பள விவரம் வெளியானது..

Featured

ஒவ்வொரு எபிசோடுக்கும் லட்சங்களில் சம்பளம்! விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பள விவரம் வெளியானது..

தமிழ்நாட்டில் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே உடனே நம் நினைவுக்கு விஜய் டிவியின் முக்கிய முகங்கள் தான் வருகிறார்கள். அந்த அளவிற்கு, விஜய் டிவி தொகுப்பாளர்கள் மக்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர். டிடி, கோபிநாத், ரம்யா, பாவனா, பிரியங்கா, மாகாபா ஆனந்த், மகேஷ், ரக்ஷன், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் சிறந்த தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர். இப்போது, புதிய முகங்களும் விஜய் டிவி வாயிலாக தொலைக்காட்சியில் களமிறங்கி வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோக்களின் ‘கிங்’ எனப் பாராட்டப்படும் விஜய் டிவி, பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ரக்ஷன்
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தனது தொகுப்பாளர் பயணத்தை தொடங்கிய ரக்ஷன், தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெற்றுவருகிறார்.

மாகாபா ஆனந்த்
பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொகுப்பாளராக தோன்றி வருகிறார். ‘சூப்பர் சிங்கர்’, ‘அண்டாகாகசம்’, ‘ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். தற்போது, மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் பெற்றுவருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே
மாகாபாவுடன் இணைந்து ‘சூப்பர் சிங்கர்’, ‘ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா’ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியையும் தனியாக தொகுத்து வழங்குகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.

கோபிநாத்
15 ஆண்டுகளுக்கு மேல் விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார். ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். இது தவிர, விருது விழாக்கள் மற்றும் பிரபலங்களுடனான பேட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலக்கி வருகிறார். கோபிநாத் ஒரு எபிசோடுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தன் திருமண நாளில் விஜய் எடுத்த அதிரடி முடிவு – தமிழகம் முழுக்க பரபரப்பு!

More in Featured

To Top