Connect with us

என்னால் அது முடியாது என ட்ரோல் செய்யப்பட்டது: அனுபமா ஓப்பனாக சொன்ன உண்மை..

Featured

என்னால் அது முடியாது என ட்ரோல் செய்யப்பட்டது: அனுபமா ஓப்பனாக சொன்ன உண்மை..

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாகிய அனுபமா பரமேஸ்வரன், நிவின் പാളി நடிப்பில் வெளிவந்த மலையாள படமான ‘ப்ரேமம்’ மூலம் ரசிகர்களிடையில் பெயர் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தமிழில் தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் ‘சைரன்’ படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் நடித்துள்ளார். தற்போது, சுரேஷ்கோபி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ என்ற படத்தில் அனுபமா நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனுபமா பேசிய கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.

அவர் கூறியதாவது, “என்னால் நடிக்க முடியாது என்று பலர் ட்ரோல் செய்தனர். இதனை மீறி இயக்குநர் பிரவீன் என்னை இந்த படத்தில் நடிக்க வைத்தார். கடந்த ஆண்டு என் நடிப்பில் வெளிவந்த ‘டிராகன்’ மற்றும் ‘தில்லுஸ்கொயர்’ போன்ற படங்கள் வெற்றி பெற்றதால் நான் உற்சாகமடைந்தேன். என்னை ஆதரித்தவர்களுக்கும் வெறுத்தவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி படம் பார்த்து 40 வருடங்களாக செய்த தவறு – சசிகுமார் வெளிப்படையாக சொன்ன அதிர்ச்சி உண்மை!

More in Featured

To Top