Connect with us

அஜித்குமார் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு! பின்னணியில் என்ன காரணம்?

Featured

அஜித்குமார் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு! பின்னணியில் என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் நீண்ட காலமாக பெரிதும் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் இவர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில், நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சிறந்த சாதனை படைத்தது. தற்போது நடிகர் அஜித் ரேஸிங் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை யுவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “நடிகர் அஜித்தை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நாங்கள் கார்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top