Connect with us

கமலுடன் மாயாவை வைத்து திரித்து பேசிய விஜய் டிவி பிரபலங்கள் – வைரல் வீடியோ

Bigg Boss Tamil Season 7

கமலுடன் மாயாவை வைத்து திரித்து பேசிய விஜய் டிவி பிரபலங்கள் – வைரல் வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசனுடன் நடிகை மாயாவை வைத்து விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி திரித்து பேசியுள்ள வீடியோ தற்போது செம வைராலகி வருகிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பார்க்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் வின்னர் யார் என்று நாளை அனைவருக்கு, தெரிந்துவிடும் .

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ஏராளமான சம்பவங்கள் பார்வையாளர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு செம வைரலாக வலம் வரும் .

அப்படியே ட்ரோல் செய்தாலும் போட்டியாளர்களுடன் இந்த கலாய் நின்றுவிடும் ஆனால் இம்முறை உலகநாயகன் கமல்ஹாசனுடன் பெண் போட்டியாளர் ஒருவரை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிருக்கும் வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி இருவரும் துபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரையும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் ட்ரோல் செய்துள்ளனர்.

அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் சரசரவென பரவ தற்போது செம . இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார்.

அப்போது உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூற. கமலுடன் மாயாவை மோசமாக ட்ரோல் செய்யும் வகையில் புகழ் குரேஷி பேசியுள்ளனர் .

இதனை கண்ட கமல் மற்றும் மாயாவின் ரசிகர்கள் புகழையும் குரேஷியையும் கண்டபடி திட்டி கமெண்டில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதோ அந்த விடியோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Bigg Boss Tamil Season 7

To Top