Connect with us

மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவசர அவசரமாக ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் விஜய்..!!!

Cinema News

மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவசர அவசரமாக ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பும் விஜய்..!!!

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஸ்யாவில் இருக்கும் நடிகர் விஜய் தமிழகத்தில் நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய அவசர அவசரமாக சென்னை திரும்பும் பணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய அனைவரும் சொந்த ஊருக்கு சென்று வரும் நிலையில் தமிழக அரசும் மக்களின் தேவைக்காக சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதேபோல் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் திரைபிரபலன்கள் தங்களது கடமைகளை செய்ய நாடு திரும்பி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கோட் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ரஸ்யாவில் இருக்கும் நடிகர் விஜய் தனது வாக்கை நாளை பதிவு செய்ய அவசர அவசரமாக சென்னை திரும்பும் பணிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Jailer 2 Box Office: மீண்டும் மாஸ் காட்டிய ரஜினி! ஒரே நாளில் ரூ.24 கோடி வசூல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா ஜெயிலர் 2?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top