Connect with us

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை: வாணி போஜனின் வெற்றிக் கதைகள்..

Featured

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை: வாணி போஜனின் வெற்றிக் கதைகள்..

தமிழ் சின்னத்திரை உலகில் “தெய்வ மகள்” சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வாணி போஜன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தன்னுடைய அழகு, திறமை, மற்றும் நேர்த்தியான நடிப்பால் “சின்னத்திரை நயன்தாரா” என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அவருடைய முதல் படமான ஓ மை கடவுளே வெற்றியின் மூலம், சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த வாணி, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் இந்த வெற்றிக்கு பின்புறம் பல சோதனைகளும் இருந்தன.

சமீபத்திய ஒரு பேட்டியில், சினிமாவில் அடித்தலமாக இருந்தது எப்படி என்பதை வாணி பகிர்ந்துள்ளார்.

அவருடைய வார்த்தைகளில்:
“ஒரு தனியார் ஏர்லைனில் சூப்பர் வைசராக பணியாற்றினேன். அப்போது, மக்களுடன் நட்பு பாராட்டுவதும், நன்றாக பேசுவதும் எனக்கு பெரிய பலமாக இருந்தது. இரு ஆண்டுகளில் புரோமோஷன் பெற்றேன். ஆனால், மேனஜர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது, டிகிரி இல்லை என்பதற்காக வேலையை இழந்தேன். அதனால் ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன்.

அப்போது, ஜவுளிக்கடைக்கு மாடலாக வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து நான் சீரியல் உலகில் வந்தேன். அதுவே எனக்கு இன்று இதையெல்லாம் கொடுத்தது.”

வாணியின் இந்த பயணம் தன்னம்பிக்கையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் வந்து தனக்கென ஒரு அழியாத இடத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் "கேம் சேஞ்சர்" படத்தின் மோசமான வசூல் நிலவரம்..

More in Featured

To Top