Connect with us

பிப்.19இல் வணங்கான் படத்தின் டீசர்.. வெளியானது அறிவிப்பு

Vanangaan_Teaser

Cinema News

பிப்.19இல் வணங்கான் படத்தின் டீசர்.. வெளியானது அறிவிப்பு

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தின் டீசர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் நன்றாக இல்லை எனக் தயாரிப்பாளர்கள் அதை வெளியிட மறுத்துவிட்டனர்.

மேலும், அந்த படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டனர். இந்த படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை பாலா இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், படம் குறித்து இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா வணங்கான் படத்தில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருந்த ரோலில் அருண் விஜய் ஒப்பந்தமானார். அவருடன் மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோரும் நடிக்க, படத்திற்காய் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

முன்னதாக. அருண் விஜய் ஒரு கையில் விநாயகர் சிலையும், மறு கையில் பெரியார் சிலையும் வைத்திருப்பது போல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. எனினும், அதன் பிறகு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாலாவுக்கு இந்த படம் சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top