Connect with us

லவ்வர் படம் வேற லெவல்.. பாராட்டு மழை பொழிந்த இயக்குனர் செல்வராகவன்

Selvaraghavan_Lover

Cinema News

லவ்வர் படம் வேற லெவல்.. பாராட்டு மழை பொழிந்த இயக்குனர் செல்வராகவன்

மணிகண்டன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள லவ்வர் திரைப்படம் இயக்குனர் செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

குட் நைட் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மணிகண்டன் தனது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு அவர் நடிப்பில் தயாரான லவ்வர் திரைப்படம் சமீபத்தில் காதலர் தினத்திற்கு முந்தைய வாரம் வெளியானது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் படமும் அதே தேதியில் வெளியாகி இருந்தாலும், அந்த படத்தை விட லவ்வர் படம் சிறப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், லவ்வர் படம் வசூல் ரீதியாகவும் லால் சலாம் படத்திற்கு போட்டியாக மாறியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் லவ்வர் படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “லவ்வர் படம் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.

இந்த தலைமுறை காதலை சிறப்பாக காட்டியுள்ளீர்கள். நானா படம் பார்க்கிறேன் என மெய்மறந்து பார்த்தேன். அந்தளவிற்கு உண்மையாக இருந்தது.” எனப் பாராட்டியுள்ளார். அவரின் பதிவை பகிர்ந்துள்ள நடிகர் மணிகண்டன், இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  150 கோடி வசூலை கடந்தது பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

More in Cinema News

To Top