Connect with us

ஆமீர் கானின் மகளாக நடித்த 19 வயது இளம் நடிகை மரணம்.. காரணம் என்ன?

Suhani_bhatnagar

Cinema News

ஆமீர் கானின் மகளாக நடித்த 19 வயது இளம் நடிகை மரணம்.. காரணம் என்ன?

பாலிவுட் நடிகர் அமீர் கானின் தங்கல் படத்திக் இளம் வயது பபிதா போகத் கதாபாத்திரத்தில் நடித்த சுஹானி பட்நாகர் தனது 19 வயதில் நேற்று காலமானார்.

அமீர் கானின் நிறுவனமான அமீர் கான் புரொடக்ஷன்ஸ் இன்று எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளதோடு இரங்கல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், ‘எங்கள் சுஹானி காலமானதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது தாயார் பூஜாவுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். திறமையான இளம் பெண் சுஹானி இல்லாமல் தங்கல் முழுமையடையாது. சுஹானி, நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்.” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 19 வயதே ஆன சுஹானியின் மரணத்திற்கான காரணம் குறித்து எதிலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில், சுஹானி ஒரு விபத்தில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவுக்குப் பிறகு, மருத்துவ ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், இதற்காக பிப்ரவரி 7ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 16 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in Cinema News

To Top