Connect with us

ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஹிப்ஹாப் ஆதி தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் துள்ளலான இசையமைப்பாளராகவும் துறுதுறுவான நடிகராகவும் கிளாஸான இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆதி .

ஹிப்ஹாப் தமிழா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்து ரசிகர்கள் மத்தியில் மெல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் இவரது தயாரிப்பில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது . ஆதியே இயக்கி , நடித்து , இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி இப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top