Connect with us

ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிய பிரம்மாண்டம் – ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

ஹாலிவுட் சினிமாவை மிஞ்சிய பிரம்மாண்டம் – ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரையுலகில் இருக்கும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 AD .

நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரைலரில் வரும் ஒவ்வரும் காட்சியும் இந்திய சினிமா இதுவரை கண்டிராத அட்டகாச காட்சிகளாக அமைந்துள்ளது. சொல்லப்போனால் ட்ரைலரில் வரும் கிராபிக்ஸ் காட்சிங்கள் ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு உள்ளது.

தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்தின் ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷின் ராயன் படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

More in Cinema News

To Top