Connect with us

கார்த்தியின் 30வது திரைப்படம் குறித்து வெளியான டக்கர் அப்டேட்..!!

Cinema News

கார்த்தியின் 30வது திரைப்படம் குறித்து வெளியான டக்கர் அப்டேட்..!!

கலக்கல் நாயகன் கார்த்தியின் நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 30வது திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜப்பான்’ படம் படு தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது தனது அடுத்த படங்களை கார்த்தி கண்ணும் கருத்துமாக தேர்வு செய்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் கைவசம் வா வாத்தியாரே, மெய்யழகன் படங்கள் உள்ளன. இப்படங்களின் First லுக் போஸ்டர்கள் அன்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது .

இதையடுத்து நடிகர் நடிக்கும் அவரது 30வது திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் தான் கார்த்தி தனது 30வது படத்தை நடிக்க உள்ளாராம் . இதுமட்டுமின்றி இப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தியின் கம் பேக்கிற்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் இந்நிலையில் இந்த அப்டேட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிப்பதா திராவிட மாடல்..? - அன்புமணி காட்டம்..!!

More in Cinema News

To Top