Connect with us

“இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் Character இதுதானா?! ரகசியத்தை உடைத்த ‘Singapore Saloon’ இயக்குனர்!”

Cinema News

“இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் Character இதுதானா?! ரகசியத்தை உடைத்த ‘Singapore Saloon’ இயக்குனர்!”

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது கேரக்டர் என்ன என்பது குறித்த தகவலை இயக்குனர் கோகுல் வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று கோகுல் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் ஒரு சினிமா இயக்குனர் ஆக வருகிறார் என்றும் ஆர்.ஜே பாலாஜியின் சலூனுக்கு அவர் வரும் காட்சி தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு ஸ்டார் அந்தஸ்து உள்ள நபர் தேவை என்று நான் யோசித்தபோது எனக்கு லோகேஷ் கனகராஜ் தான் ஞாபகத்திற்கு வந்தார் என்றும் அவரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே தனக்கு அவரை தெரியும் என்றும், அன்பறிவ் மாஸ்டர்கள் மூலம் அவர் தனக்கு பழக்கமானதாகவும் அப்போது தான் ’காஷ்மோரா’ என்ற படத்தை இயக்கி வந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் - வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

More in Cinema News

To Top