Connect with us

உச்சகட்ட எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் – பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..?

Featured

உச்சகட்ட எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் – பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெறும் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் நாட்டு மக்கள் அனைவரும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஒலிம்பிக் ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் நடிப்பு ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற மல்யுத்த அரையிறுதி போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்துகொண்டார்

50 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கெத்தாக முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.

இந்நிலையில் இன்று இரவு 11.23 மணிக்கு நடைபெறவுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட்-ஐ வினேஷ் போகத் எதிர்கொள்கிறார் .

ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ள வினேஷ் போகத், தங்கம் வெல்வாரா என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நேரத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தஞ்சையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்..!!

More in Featured

To Top