Connect with us

ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு..!!

Featured

ஸ்பெயின் தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு..!!

ஸ்பெயின் நாட்டில் கோலாகலமாக நடைபெற இருக்கும் ஹாக்கி தொடரில் பங்கேற்க போகும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 5 நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி தொடர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது .

இந்நிலையில் இதற்கு முன் நடைபெற்ற பல போட்டிகளில் அபாரமாக விளையாடிய இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது . இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஆக்கி கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பெயர் பட்டியல் :

ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், கிரிஷன் பகதூர் பதக், சூரஜ் கர்கேரா, ஜுக்ராஜ் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், அமித் ரோஹிதாஸ். வருண் குமார், சுமித், சஞ்சய், நிலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாச், விவேக் சாஹர் பிரசாத், நீலகண்ட சர்மா, ஷாஹர்லகன் பிரஸ்தாஸ்குமார், சிங்ஹர்லாஸ் குமார் ரபிச்சந்திர சிங் மொய்ராங்தேம். மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய். கார்த்தி செல்வம், தில்ப்ரீத் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங்.

இந்நிலையில் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கும் இந்த தொடரில் இறுதி போட்டி வரை சென்று எந்த அணி தொடரை கைப்பற்றப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top