Connect with us

கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க – அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் படத்தின் 2nd சிங்கள் வெளியானது..!!

Cinema News

கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க – அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் படத்தின் 2nd சிங்கள் வெளியானது..!!

அருண் விஜயின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர்1 படத்தில் இருந்து 2nd சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜயின் மாஸான நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி மெலோடி நாயகன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வேற லெவலில் தயாராகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

அதன்படி இப்படத்தின் 2nd சிங்கள் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.அச்சமே அச்சமே என தொடங்கும் இப்பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பை மெல்ல மெல்ல பெற்று வருகிறது.

ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருக்க , அருண் விஜய்யும் இந்த ரேசில் இணைந்துள்ளார்

ஆக இந்த வருட பொங்கலுக்கு பல படங்கள் வெளிவரும் நிலையில் எந்த படம் ரசிகர்களின் மனதை வென்று சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : திலக் வர்மா , வதேரா சரவெடி ஆட்டம் - ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top