Connect with us

‘வேட்டையன்’ படத்தில் தலைவரின் இண்ட்ரோ பாடல் இப்படி தான் இருக்குமா..? – வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

‘வேட்டையன்’ படத்தில் தலைவரின் இண்ட்ரோ பாடல் இப்படி தான் இருக்குமா..? – வெளியான டக்கர் தகவல்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தின் இண்ட்ரோ பாடல் குறித்த சிறப்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கேரளா சினிமாவின் ராக்ஸ்டார் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

இசையுலகின் ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.

ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் குட்டி அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

அதன் படி வேட்டையன் படத்தில் நம்ப தலைவருக்கு பாஷா படத்தில் வருவது போல் ஒரு மாஸ் இண்ட்ரோ பாடல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பாடலின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாகவும் இதற்காக பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் ஏராளமான நடன கலைஞர்கள் இந்த பாடலில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top