Connect with us

IPL 2024 : தொடர் தோல்வியில் இருந்து மீண்டெழுமா டெல்லி – லக்னோ அணியுடன் இன்று மோதல்..!!!

Featured

IPL 2024 : தொடர் தோல்வியில் இருந்து மீண்டெழுமா டெல்லி – லக்னோ அணியுடன் இன்று மோதல்..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் – லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் DC – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் 3 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 3 வது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top