Connect with us

செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..இது இருந்தாள் தான் ஜாமீன்!

Politics

செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..இது இருந்தாள் தான் ஜாமீன்!

சட்டவிரோதமாக பணத்தை பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்…இது பெரிதளவில் சர்ச்சை ஆகி பெரும் விமர்சனம் ஆகி இருந்தது..

கைது செய்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது..அதனை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டதில் இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது பின்னர் உயர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஜூன் 22ஆம் தேதி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது…அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தார் பலமுறை ஜாமீனுக்கு அவர் விண்ணப்பித்தும் கூட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது அது அவருக்கு கிடைக்காதது போல பல சம்பவங்கள் நடந்தது…

தற்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது…அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது….உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…அப்போது தான் எங்களால் முடிவெடுக்க என சொல்லப்பட்டு இருக்கின்றது..

செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று அவரது சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார்…அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…அதனால் இந்த வாரத்தில் ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா என்ற தெளிவு கிடைக்கும் என சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

More in Politics

To Top