Connect with us

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா… அந்த முதல் காதல் என்னவானது தெரியுமா?

Featured

18 வயதில் ஒருவரை காதலித்த சமந்தா… அந்த முதல் காதல் என்னவானது தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சமந்தா, தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். நடிகையாக மட்டுமின்றி, சமீபத்தில் ‘சுபம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தனது முதல்படியாக அறிமுகமானார்.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, ‘பங்காரம்’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் கதையின் நாயகியாகவும் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமன்றி, ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகும் ‘Rakt Bramhand – The Bloody Kingdom’ என்ற வெப் தொடரிலும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்துக்குத் தொலைநேரப் பேட்டி அளித்த சமந்தா, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பேட்டியில் பேசிய அவர், “டாட்டூ குத்திக்கொள்வது என்பது எனக்கு வழக்கமான ஒன்று. ஒரு காலத்தில் டாட்டூ போட்டிருந்தேன். எனக்கு 18 வயதாக இருந்தபோது ஒருவரை காதலித்தேன். அதுதான் என் முதல் காதல். அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாக உறுதியுடன் நம்பினேன். அதனால் அவருக்காக ஒரு டாட்டூ போட்டுக்கொண்டேன்,” எனத் தெரிவித்தார்.

இத்தகவலைப் பகிர்ந்த சமந்தா, அந்த காதல் எவ்வாறு முடிந்தது, அந்த டாட்டூ தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதைக் கூற விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். சமந்தா கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலகளவில் 8 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top