Connect with us

‘இட்லி கடை’க்குப் பிறகு ‘தேரே இஷ்க் மே’ – புதிய அத்தியாயம் தொடங்கும் தனுஷ்!

Cinema News

‘இட்லி கடை’க்குப் பிறகு ‘தேரே இஷ்க் மே’ – புதிய அத்தியாயம் தொடங்கும் தனுஷ்!

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்துக்குப் பிறகு, தனது 54ஆவது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் தனது இந்தி திரைப்படமான ‘தேரே இஷ்க் மே’ படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக மும்பைக்கு பயணமாகியுள்ளார். ஆனந்த் எல். ராய் இயக்கியுள்ள இந்த படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பை ஏ.ஆர். ரஹ்மான் செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் ரூ.500 கோடி வசூல் – ‘துரந்தர்’ பாக்ஸ் ஆபிஸ் சாதனை 🔥

More in Cinema News

To Top