Connect with us

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ தகவல் இதோ!

Featured

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ தகவல் இதோ!

பொதுவாக திரில்லர் கதைக்களத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படி ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த க்ரைம் திரில்லர் படம் “மார்கன்” ஆகும். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இந்த படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம், இதுவரை 8 நாட்கள் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபீசில் காணப்படுகிறது. இந்நிலையில், 8 நாட்களில் “மார்கன்” திரைப்படம் உலகளவில் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 8 நாட்களில் இப்படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறியப்படுகிறது.

மீண்டும் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வாறு இருக்கும் என்பதற்காக ரசிகர்கள் மற்றும் திரையரங்கு வட்டாரங்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top