Connect with us

சாய் கிஷோர் சுழலில் சிக்கிய பஞ்சாப் – குஜராத் அணி அசத்தல் வெற்றி..!!!

Featured

சாய் கிஷோர் சுழலில் சிக்கிய பஞ்சாப் – குஜராத் அணி அசத்தல் வெற்றி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி கெத்துக்காட்டியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பஞ்சாபில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் GT – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரன் மற்றும் பிரபு சிம்ரன் களமிறங்கினர்.

நீதமாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் கேப்டன் சாம் கரன் 20 ரன்னிலும் பிரபு சிம்ரன் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. குஜராத் அணியில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் சாய் கிசோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜார்ட் அணி பேட்டிங் செய்தது.அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர்.

இதில் சஹாவின் விக்கெட்டை விரைவாக வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுக்க தொடங்கியது .

இதையடுத்து சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் சாய் சுதர்சன் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் 5 பவுண்டரிகளை விரட்டிய சுப்மன் கில் ரன்களை பக்குவமாக எடுத்துவந்தார்.

குஜராத் அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் விக்கெட்டை தேடிய பஞ்சாப் அணிக்கு, சுப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் இவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் லிவிங்ஸ்டன் வெளியேற்றினார் .

மறுபக்கம் நிலைத்துநின்ற சாய் சுதர்சனும் 31 ரன்னில் வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த ஓமர்சாயும் 10 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து களம் கண்ட திவேட்டியா சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தார். இந்தவெற்றியின் மூலம் குஜராத் அணி. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top