Connect with us

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹசரங்கா, ஹேசல்வுட் உளப்பட 8 வீரர்களை விடுவித்தது ஆர்.சி.பி. அணி..!!

Featured

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹசரங்கா, ஹேசல்வுட் உளப்பட 8 வீரர்களை விடுவித்தது ஆர்.சி.பி. அணி..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹசரங்கா, ஹேசல்வுட் உளப்பட 8 வீரர்களை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் தற்போது நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுத்துள்ள வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது .

அதன்படி ஜோஷ் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், கேதர் ஜாதவ், பிரேஸ்வெல், ஃபின் ஆலன், டேவிட் வில்லி, வெயின் பார்னெல் ஆகிய 8 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விடுவித்துள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top