Connect with us

“ICC: T20 Bowling தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்!”

Sports

“ICC: T20 Bowling தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்!”

23 வயதான ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்கள் வீழ்த்தி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ICC தரவரிசையில் 699 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஆதில் ரஷித் ஆகியோர் தலா 679 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மற்றொரு இலங்கைசுழற்பந்து வீச்சாளர் தீக்சனா 677 புள்ளிகளுடன் 5-வது இடத்தைபிடித்துள்ளார்.

ரவி பிஷ்னோயை தவிர முதல் 10 இடங்களுக்குள் மற்ற இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இடம்பெறவில்லை. அக்சர் படேல் 9 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை அடைந்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடர்கிறார்.

அதேவேளையில் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஓர் இடம் பின்தங்கி 7-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத போதிலும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 3-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Kara ரிலீஸ்… முதல் நாளே ப்ளாக்பஸ்டர் குரல்!”

More in Sports

To Top