Connect with us

ஜூனியர் ஆசிய கோப்பைக்கு இந்திய கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்

Sports

ஜூனியர் ஆசிய கோப்பைக்கு இந்திய கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்

புதுடெல்லி,
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர், வரும் டிசம்பர் 12 முதல் 21 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் தகுதி சுற்றில் இருந்து வரும் அணியை டிசம்பர் 12-ஆம் தேதி எதிர்கொள்ளும். பின்னர் டிசம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தானையும், டிசம்பர் 16-ஆம் தேதி மீண்டும் தகுதி சுற்று அணியையும் சந்திக்க உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மராட்டியத்தைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அணியின் கேப்டனாக தொடருகிறார். விஹான் மல்கோத்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியும் தன் இடத்தை உறுதியாக வைத்துள்ளார்.

இந்திய அணி வருமாறு:
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபியான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சவுகான், ஹிலான் பட்டேல், நமன் புஷ்பாக், தீபேஷ், ஹெனில் பட்டேல், கிஷன் குமார் சிங், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.

மாற்று வீரர்கள்: ராகுல் குமார், ஹேம்சுதேஷன், கிஷோர், ஆதித்யா ராவத்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

Advertisement
 

Trending

 
Advertisement
To Top