Connect with us

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் இவ்ளோவா??

Lal_Salaam_Rajinikanth_Salary

Cinema News

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் சம்பளம் இவ்ளோவா??

லால் சலாம் படத்தில் நடிக்க ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பளம் வாங்கியதாக சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 1990களில் கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து லால் சலாம் என்ற படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில், படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் பிப்ரவரி 9 அன்று திரைக்கு வரவுள்ளதோடு சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட்டது மற்றும் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், டிரைலரை பார்க்கும்போது இந்து -முஸ்லீம் கலவரம் குறித்த காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் மகளுக்காக ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் 30 முதல் 40 நிமிடங்களில் ரஜினி இடம்பெறும் காட்சிகள் உள்ள நிலையில், ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என மொத்தம் ரூ.40 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top