Connect with us

மிகப் பெரிய வெற்றி விஜய்யின் முதல் மாநில மாநாடு – வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Cinema News

மிகப் பெரிய வெற்றி விஜய்யின் முதல் மாநில மாநாடு – வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிகப் பெரிய வெற்றி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிக்கு வாழ்த்து கூற அவரது ரசிகர்கள் திரண்டனர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது :

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மாநாடு மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  VJ மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரம்மாண்ட வீடு – முழு விவரம்!

More in Cinema News

To Top