Connect with us

“பருத்திவீரன் படத்தை வாங்க வேண்டாம் என்று சொன்னது சிவகுமார் சார் தான்..! உண்மையை உடைத்து சொன்ன பிரபல தயாரிப்பாளர்!”

Cinema News

“பருத்திவீரன் படத்தை வாங்க வேண்டாம் என்று சொன்னது சிவகுமார் சார் தான்..! உண்மையை உடைத்து சொன்ன பிரபல தயாரிப்பாளர்!”

அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பைப் பெற்றது. பருத்திவீரன் மூலம் முதல் படத்திலேயே கார்த்தியின் கேரியர் உச்சம் தொட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸின் போது அமீர் – ஞானவேல்ராஜா இடையே மோதல் உருவானது. பருத்திவீரன் படத்தை அமீர் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கியுள்ளார்.

ஆனால் சொன்னதை விட பட்ஜெட் அதிகமானதோடு, படப்பிடிப்பும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததால், அமீர் – ஞானவேல்ராஜா இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அப்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக அமீர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பருத்திவீரன் படத்தை அமீரிடம் இருந்து மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், பருத்திவீரன் படத்தை தயாரித்ததோடு அதன் சென்சார் உட்பட அனைத்து உரிமைகளும் அமீரின் பெயரில் தான் உள்ளன. இந்தச் சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் எடுத்தது. இதில் அமீர் குறித்து கடுமையாக விமர்சித்திருந்த ஞானவேல் ராஜா, ஒருகட்டத்தில் அவரை திருடன் என கூறினார். இந்த விவகாரத்தில் அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், இயக்குநர்கள் பாரதிராஜா, கரு பழனியப்பன், சேரண், நந்தா பெரியசாமி உள்ளிட்ட பெரும்பாலானோர் அமீருக்கு ஆதரவுத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பருத்திவீரன் சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் வெளிப்படையாக பேசியுள்ளார். பருத்திவீரன் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் சிவசக்தி பாண்டியன். இந்தப் படத்தின் நார்த் ஆற்காடு உரிமையை அமீரிடம் இருந்து சிவசக்தி பாண்டியன் வாங்க முடிவு செய்திருந்தாராம். ஆனால், அப்போது தலைவராக இருந்த ராமநாராயணன், பருத்திவீரன் உரிமையை யாரும் வாங்க வேண்டாம் என கூறிவிட்டார்.

சிவகுமார் சாரே போனில் பேசியதோடு, அமீரிடம் இருந்து பருத்திவீரன் படத்தை வாங்க வேண்டாம் என சொன்னதாக சிவசக்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால் பருத்திவீரன் சர்ச்சை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக அமீர் குறித்து தவறாக பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கு சசிகுமார், சமுத்திரகனி, கரு பழனியப்பன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top