Connect with us

10 நாட்களில் ரூ.500 கோடி வசூல் – ‘துரந்தர்’ பாக்ஸ் ஆபிஸ் சாதனை 🔥

Cinema News

10 நாட்களில் ரூ.500 கோடி வசூல் – ‘துரந்தர்’ பாக்ஸ் ஆபிஸ் சாதனை 🔥

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ள “துரந்தர்” திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 10 நாட்களில் உலகளவில் ரூ.500 கோடி வசூல் செய்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ரன்வீர் சிங்கின் நடிப்பு, வலுவான கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பு ஆகியவை ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வலுவான ஆதரவு தொடரும் நிலையில், வரும் நாட்களிலும் “துரந்தர்” திரைப்படத்தின் வசூல் மேலும் உயரும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top