Connect with us

பிருத்வி ராஜின் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – எப்போ வெளியாகுது தெரியுமா..?

Cinema News

பிருத்வி ராஜின் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – எப்போ வெளியாகுது தெரியுமா..?

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

பற்பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தமிழ் சினிமா ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் கன்னட சினிமா அகல பாதாளத்தில் கிடந்த நேரத்தில் கே.ஜி.எப்.என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் தான் நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் .

சினிமா ரசிகர்கள் அனைவரையும் திருப்தி படுத்திய இப்படத்தின் இரண்டு பாகங்களும் உலகளவில் விஸ்வரூப வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘சலார்’ கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் சலார் படத்தையும் தயாரித்தது .

திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் நாயகனாக பிரபாஸ் நடிக்க வெறித்தனமான வில்லனாக ப்ரித்திவிராஜ் நடித்திருந்தார் .

சலார் படத்தில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ப்ரித்திவிராஜ் தற்போது மீண்டும் ஒரு மாஸ் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார் .

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ‘ஆடு ஜீவிதம்’.

ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஓயாமல் கேட்டு வந்த நிலையில் தற்போது பகுழுவிடம் இருந்து ஒரு சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் பிளெஸ்ஸி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பிருத்வி ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் - எந்த படம் தெரியுமா..?

More in Cinema News

To Top