Connect with us

அதிர்ச்சியளிக்கும் நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி – ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறுவதாக அறிவிப்பு..!!

Cinema News

அதிர்ச்சியளிக்கும் நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி – ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறுவதாக அறிவிப்பு..!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதி பரஸ்பர விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.

திரையுலகில் நாம் பார்த்த நமக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் பலர் விவாகரத்து அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டு வருவது மிகவும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சமந்தா – நாக சைத்தான்யா , தனுஷ் – ஐஸ்வர்யா , ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி , ஜெயம் ரவி – ஆர்த்தி உள்ளிட்ட பலர் தங்களது விகாரத்தை அறிவித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு தம்பதி பரஸ்பர விவாகரத்து பெறுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது.

ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எல்லாமே எதிர்பாராத முடிவாக உள்ளன. உடைந்த இதயங்களின் எடையால் இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும். எனினும் இச்சிதறலில், உடைந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும், அர்த்தத்தை தேடி வருகிறோம். எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

1995ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹாதிஜா, ரஹிமா, அமீன் என 3 பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாராவின் உண்மை முகம்: பிரபல இயக்குனரின் ஓபன் டாக்..

More in Cinema News

To Top