Connect with us

ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர் – ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு..!!

Cinema News

ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர் – ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு..!!

என் கணவர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர் என விவாகரத்து குறித்து சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து குறித்து இணையத்தில் பல விதமான பதிவுகளும் , வீடியோக்களும் போர் தொடக்க இதற்கு அமீன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவாகரத்து விவகாரம் குறித்து முதல் முறையாக சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாய்ரா பானு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறிருப்பதாவது :

நான் இப்போது மும்பையில் இருக்கிறேன்; கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை; அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து விலகியிருக்கிறேன்; அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்

உலகிலேயே தலைசிறந்த மனிதர் அவர்; என்னுடைய குழந்தைகள், ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை

அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்; அதே அளவு அவரும் என்னை நேசிக்கிறார்; அவர் பெயருக்கு யாரும் களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த நடிகருடன் நடிக்கவே முடியாது... ஆக்ஷன் கிங் யாரை குறிக்கிறார் பாருங்க!

More in Cinema News

To Top