Connect with us

நான் பட்ட இந்த அசிங்கத்தை மறக்கவே மாட்டேன்..பிரதீப் சினிமாவில் சந்தித்த மோசமான நிகழ்வு…

Bigg Boss Tamil Season 7

நான் பட்ட இந்த அசிங்கத்தை மறக்கவே மாட்டேன்..பிரதீப் சினிமாவில் சந்தித்த மோசமான நிகழ்வு…

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி…இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது…கமல்ஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி 50 நாளை நெருங்கிவிட்டது இருந்தும் பல சண்டை பிரச்சனை என ஓடி வந்து கொண்டு இருக்கின்றது…

அடுத்து வரப்போகும் 50 நாட்களில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது ஆனால் பல அதிரடி நிகழ்வுகள் நிகழ்ச்சியில் நடக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது…இதுவரை நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களில் பிரதீப்பை Red Card கொடுத்து வெளியே அனுப்பியது தான் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது…இன்றும் கூட அதனை பற்றி மக்கள் பேசி வருகின்றது என்பது முடியா கதையாக தான் உள்ளது…

அவர் மீண்டும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்குள் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை அது நிறைவேறுமா என்பது தெரியவில்லை…கமல் அதனை ஒற்றுக்கொள்ள மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..

இயக்குனர் கனவோடு இருந்த பிரதீப் தற்போது அதற்கான வேலைகளில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பிரதீப் தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான நிகழ்வு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அருவி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆன பிரதீப் அதை தொடர்ந்து வாழ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

பிரதீப் ஒரு பேட்டியில் என்னுடைய முதல் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு பசி வந்த காரணத்தால் நான் சாப்பிட சென்றேன் அப்போது ஒரு சம்பவம் நடந்தது,புரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார் நானும் சாப்பிட போனேன்.

அப்போது புரொடக்ஷன் மேனேஜர் அங்கு வந்தார் அவர் டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடற என்று திட்டினார் அதனை போன்ற அசிங்கத்தை என்னால் மறக்கவே முடியாது…அன்றில் இருந்து நான் அந்த செட்டில் சாப்பிடவே இல்லை என்று பேசியிருக்கிறார் இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top